தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது விஜய் டிவி.தங்களின் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,விறுவிறுப்பான தொடர்கள் மூலமாகவும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளனர் விஜய் தொலைக்காட்சி.

விஜய் டிவியில் பணியாற்றிய நடித்த பலரும் தற்போது நட்சத்திரங்களாக திரையுலகத்தில் ஜொலித்து வருகின்றனர்.சமீபகாலமாக விஜய் டிவியின் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.சீரியல் நட்சத்திரங்களும் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்களாக மாறுகின்றனர்.

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பை தொடங்கவுள்ள தொடர் தமிழும் சரஸ்வதியும்,தீபக் மற்றும் நக்ஷத்திரா இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடர் நாளை முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதனை அடுத்து சில தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை விஜய் தொலைக்காட்சி மாற்றியுள்ளனர். காற்றுக்கென்ன வேலி தொடர் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே தொடர் புதிய தொடரின் ஒளிபரப்பால் மாலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.