விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலங்களாக உள்ளனர்.

சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சன் மியூஸிக்கில் மாமிஸ் டே அவுட் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியங்கா.தனது கடின உழைப்பால் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் ப்ரியங்கா.

சூப்பர் சிங்கர்,கலக்கப்போவது யாரு,ஸ்டார்ட் மியூசிக்,கிங்ஸ் ஆப் காமெடி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.மேலும் கலக்கப்போவது யாரு தொடரில் நடுவராகவும் பங்கேற்று அசத்தியிருந்தார் ப்ரியங்கா.

இவர் தொகுத்து வழங்கி வந்த செம ஹிட் ஷோவான ஸ்டார்ட் மியூசிக் சமீபத்தில் நிறைவடைந்தது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை  தொடர்ந்து மாகபா ஆனந்த் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார் ப்ரியங்கா.தற்போது ப்ரியங்கா மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளதாக அவரே தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார்.Food Poisoning காரணமாக தான் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.