விஜய் டிவி பல வெற்றி தொடர்களை தந்து ரசிகர்களிடம் விஜய் டிவி தொடர்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.தற்போதும் விஜய் டிவியின் தொடர்கள் TRP-யில் கலக்கி வருகின்றன.விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று அன்புடன் குஷி.சின்னத்தம்பி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த தொடரில் முதலில் ஹீரோயினாக நடித்தவர் விலக ரேஷ்மா வெங்கடேஷ் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இந்நிலையில்  இந்த தொடரில் இருந்து ரேஷ்மா விலகியுள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் கிடைத்தது.

இவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.தற்போது இந்த தொடரின் நாயகியாக திருமணம் தொடரின் ஹீரோயினாக நடித்து மிகவும் பிரபலமான ஸ்ரேயா அஞ்சன் நடிக்கிறார்.இவரது எபிசோடுகள் நேற்று முதல் தொடங்கின.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள ஸ்ரேயா புதிய ஒரு தொடக்கம் ஏற்கனவே ஹிட் அடித்த குஷி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.