தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.சமீபத்தில் முடிந்த இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.

திரையரங்கு வசூல் மட்டுமல்லாமல் விஜய்க்கு என்று சமூகவலைத்தளங்களில் ஒரு பெரிய புஷ் இருக்கிறது.இவரை பற்றி என்ன நியூஸ் வந்தாலும்,என்ன புகைப்படம் வெளியானாலும் உடனே ட்ரெண்ட் அடித்து விடும்.ட்விட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலும் இவர் சம்மந்தப்பட்ட ஹாஸ்டேக்கள் அதிகம் பயன்படுத்தப்பதற்காக அறிவிக்கப்பட்டன.சமீபத்தில் தடைசெய்யப்பட்ட டிக்டாக்கிலும் விஜய் சம்மந்தப்பட்ட ஹாஸ்டேக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

யூடியூபிலும் இவரது பாடல்களும்,வீடியோக்களும் பல சாதனைகளை செய்து வருகின்றன.விஜயின் ஸ்பீடான நடன அசைவுகள்,பாடல்களில் அவர் கொடுக்கும் சின்ன சின்ன எஸ்பிரஷன்கள் என்று பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து விடும்.மேலும் இவரது ஆடியோ லான்ச் பேச்சுகளும் யூடியூபை கலக்கி வருகின்றன.சமீபத்தில் இவரது படங்களின் பாடல்கள் 300 மில்லியன் பாரவையாளர்களை பெற்று சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தற்போது மற்றுமொரு சாதனையை விஜய் படைத்துள்ளார்.யூடியூபில் பத்து 50 மில்லியன் வீடியோ பாடல்களை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை விஜய் படைத்துள்ளார்.இதனை அவரது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.