XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து உருவாகிய திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் ஷாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Master

சில தினங்கள் முன்பு மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

MasterVijay

தற்போது மாஸ்டர் படத்தில் நடித்த கல்லூரி கேங் நடிகர்கள் கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளனர். தளபதி விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டாராம் விஜய், இருந்தாலும் ஷாட் தயாரானதும் அந்த காட்சியை படமாக்கி விட்டு அங்கிருந்த பெஞ்சில் படுத்து விட்டு அதன் பிறகு கேரவான் சென்றார். நடனமாக இருக்கட்டும் அல்லது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சீன் கூறுகையிலும் சரி, அமைதியாக கேட்டுவிட்டு ஒகே போகலாம் என்று கூறியது ஆச்சர்யமாக இருந்தது.