பாலிவுட்டில் கெத்து காட்டும் விஜய் சேதுபதி – வெளியானது ஃபர்ஸி தொடர் டிரைலர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

விஜய் சேதுபதி நடித்த இந்தி தொடர் ஃபர்ஸி டிரைலர் வெளியானது - Vijay Sethupathi hindi web series farzi trailer is out | Galatta

கடந்த 2019-ம் ஆண்டு ஒடிடி யில் வெளியாகி இந்தியளவில் வெற்றியடைந்த தொடர் ‘ஃபேமிலி மேன்’ இயக்குனர் ராஜ் மற்றும் டீகே இயக்கிய இந்த தொடரில் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்திருந்திருந்தனர். அதன் பின் இந்த இயக்குனர் கூட்டணி தனது அடுத்த தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஃபர்ஸி என்று பெயரிட்டுள்ள தொடரில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே.கே.மேனன் , ரெஜினா கேசேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

எட்டு எபிசோடுகளைக் கொண்ட ஃபர்ஸி தொடர் அதிகாரப்பூர்வமாக வரும் பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடவிருப்பதாக படக்குழு முன்னதாக அறிவிருந்த நிலையில் ஃபர்ஸி தொடரின் டிரைலரை வெளியிட்டது. இதனையடுத்து ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் டிரைலரை வைரலாக்கி வருகின்றனர்.

after this point, we don't know con real hai & con Farzi 🤯#Farzi #FarziOnPrime, Feb 10 pic.twitter.com/AijbYNPd2A

— prime video IN (@PrimeVideoIN) January 13, 2023

டிரைலரில் சட்ட விரோதமாக ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் வாலிபராய் வரும் ஷாகித் கபூர் மற்றும் குழுவினரை  பிடிக்க  மிரட்டலான அதிகாரியாக வருகிறார் விஜய் சேதுபதி. ஒரு திருடன் போலீஸ் கதையை திரைக்கதையை கொண்ட டிரைலர் மேலும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்குகிறது. சர்ச்சைகளை கிளப்பிய ‘ஃபேமிலி மேன்’ தொடரை இயக்கிய கூட்டணி என்பதால் இந்த தொடருக்கும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிச்சயம் இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதியின் நடிப்பை பாலிவுட்டில் ஜொலிக்க வைக்கும். மேலும் ஃபர்ஸி தொடர் தமிழ் மொழியில் கதாநாயகன் ஷாகித் கபூருக்கு நடிகர் ஜீவா குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழ் மக்களின் மனம் கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தியில் இந்த படம் மட்டுமல்ல கத்ரினா கைப்புடன் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அட்லி இயக்கத்தில் கிங் கான் ஷாருக் கான் நடித்து வரும் 'ஜவான்' படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் தற்போது 'காந்தி டாக்ஸ்' , 'பிசாசு 2' , வெற்றிமாறனின் 'விடுதலை' மற்றும் நடிகர் சந்திப் கிருஷ்ணன் நடிப்பில் பேன் இந்தியா படமாக தயாராகியிருக்கும் 'மைக்கேல்' போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும். கடந்த ஆண்டு 'விக்ரம்' திரைப்படத்தை  தவிர வேறு படம் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் வரும் நாட்களில் தொடர்ந்து பல்வேறு இந்திய மொழி படங்களில் நடித்து விஜய் சேதுபதி மக்களை கவர்ந்து வருவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து.. என்னென்ன படங்கள் பார்க்கலாம்?  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களின் பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து.. என்னென்ன படங்கள் பார்க்கலாம்? தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களின் பட்டியல் இதோ..

சினிமா

"குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" - வாரிசு படக்குழு வெளியிட்ட Surprise Glimpse .. வைரலாகி வரும் வீடியோ..

“படப்பிடிப்பில் இதனால் தான் ஷ்யாம் என்னை திட்டினார் “ - வாரிசு பட நடிகை சம்யுக்தா..  முழு வீடியோ இதோ
சினிமா

“படப்பிடிப்பில் இதனால் தான் ஷ்யாம் என்னை திட்டினார் “ - வாரிசு பட நடிகை சம்யுக்தா.. முழு வீடியோ இதோ