தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Vijay Master Second Look Poster Releases Jan 15

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Master Second Look Poster Releases Jan 15

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.