தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

master

டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன் போன்றோர் நடித்தனர். ஷிவமோகா படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்று பேசப்படுகிறது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சென்னை காசிமேடு மற்றும் ராயபுரத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதன் மூன்றாம் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அசத்தியது. 

master master

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது இவை அனைத்தும் நாம் அறிந்தவையே. தற்போது மீண்டும் நெய்வேலி படப்பிடிப்பில் தளபதி கலந்துகொள்கிறார் என்று பேசப்படுகிறது. இதில் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.