தமிழ்,தெலுங்கில் தனது முத்திரையை பதித்த பிறகு அடுத்ததாக புதிய மொழிகளில் களமிறங்க தயாராகிறார் தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.இவர் நடித்து வரும் Dear Comrade படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

Vijay Deverkonda Rashmika Mandanna starrer Dear Comrade Song Release Postponed

ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay Deverkonda Rashmika Mandanna starrer Dear Comrade Song Release Postponed

இந்த படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அனால் சில காரணங்களால் இந்த பாடலின் ரிலீஸ் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து படத்தின் நாயகன் தனது ரசிகர்களுக்கு வருத்தத்தை ட்வீட் செய்துள்ளார்.