விஜய் அரசியலுக்கு வரமாட்டார் ,பிகில் எப்படி இருக்கும் ? வைரல் ஜோதிடரின் பதில் !
By Aravind Selvam | Galatta | July 16, 2019 12:07 PM IST
கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த தொடரில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.இதில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன் ஜோதிடர் பாலாஜி ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்த தொகுப்பு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் நிறைய சுவாரசியமான தகவல்களை தெரிவித்துள்ளார்.இதில் சினிமா சம்மந்தமாக இவர் அளித்துள்ள தகவல்கள் மீண்டும் வைரலாகி வருகிறது.
ரஜினிக்கு அரசியலில் மக்கள் ஆதரவு இருக்காது என்று தெரிவித்துளளார்.விஜய் தற்போதைக்கு அரசியலில் நுழையமாட்டார் 4,5 ஆண்டுகள் கழித்து வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.அஜித் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று தெரிவித்துள்ளார்.துப்பாக்கி படத்தை போல் விஜய்க்கு இந்த படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.