வெளியானது - திமிரு புடிச்சவன் படத்தின் பாடல் !
By Sakthi Priyan | Galatta | November 17, 2018 18:14 PM IST
பாத்திமா விஜய் ஆன்டனி தயாரிப்பில் கணேஷா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகும் படம் திமிரு புடிச்சவன். நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற தரமான படங்களை தந்து சினிமா விரும்பிகள் மத்தியில் பெரிதும் பெயர் பெற்றார் விஜய் ஆன்டனி.
இவர் நடித்திருக்கும் திமிரு புடிச்சவன் படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது. இதில் போலீஸ் வேடத்தில் வரும் விஜய் அன்டனியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்து வருகிறது.
படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், டேனியல் பாலாஜி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போன்ற நடிகர்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், இப்படத்தின் பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்புகிறது.