தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி கடின உழைப்பால் ஹீரோ அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார். 

VijayAntony

இந்நிலையில் இவர் கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மனிதனால் எதை வேண்டுமானாலும் சாதித்த விட முடியும் என நினைத்தோம், ஆனால் ஒரு வைரஸ் நம்மை வீட்டுக்குள் முடங்க வைத்துவிட்டது. பணமின்றி தேவையான பொருட்கள் கூட வாங்க முடியாத ஏழைகளும் இருக்கிறார்கள். வீட்டில் உங்களுக்கு ஏதாவது தேவையற்ற பொருள் இருந்தால், அதை ரொட்டில் வைத்து விடுங்கள். தேவைப்படுபவர்கள் எடுத்து கொள்ளட்டும் என அவர் பேசியுள்ளார். 

VijayAntony

விஜய் ஆண்டனி கைவசம் தமிழரசன் மற்றும் அக்னிச் சிறகுகள் போன்ற படங்கள் உள்ளது. இயக்குனர் விஜய் மில்டன் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.