தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஹிந்தியிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட  தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும்,திரை பிரபலங்கள் சிலரும் எதிர்த்து வந்தனர்.திரையரங்குகள் இல்லாததால் OTTயில் படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆதரித்து வந்தனர்.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள்,கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் OTTயில் வெளியாகின.இதனை தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் சில படங்களை OTT-யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்து வெளியிட்டு வருகின்றனர்.ஹிந்தியில் சில பெரிய படங்களும் OTT-யில் வெளியாகவுளள்து என்ற அறிவிப்பு வெளியானது.சில நாட்களுக்கு முன் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமால் ஹீரோவாக நடித்த Yaara என்ற ஹிந்தி படம் நேரடியாக ஜீ5-ல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்