வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறனின் படத்தில் இணைய ஆர்வம் காட்டினார்கள். 

vettrimaran

நடிகர் சூர்யா வைத்து வெற்றிமாறன் சூர்யா 40 என்ற படத்தை இயக்கவுள்ளார். கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி அசத்தியது. இந்த காம்போவை திரையில் பார்த்து ரசிக்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர் சினிமா விரும்பிகள். இந்த படத்தின் படப்பிடிப்பு சம்மர் 2020-ல் துவங்கும் என்ற செய்தி கலாட்டா செவிகளுக்கு எட்டியது. மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. 

kalaipulisthanu

சூர்யா 39 இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய சூரரைப் போற்று படமும் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.