தனது ஒவ்வொரு படைப்புகளின் வாயிலாகவும் தான் ஒரு ஆகச் சிறந்த இயக்குனர் என தொடர்ந்து நிருபித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக முதல்முறை நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்தில் இணைகிறார்.  சமீபத்தில் சென்னையில் உள்ள ஈசிஆரில் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி தயாராகும் விடுதலை திரைப்படத்தை தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

RS இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் விடுதலை திரைப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதலைத் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினரோடு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூரி ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#Viduthalai Part 1 & #Viduthalai Part 2 shooting wrapped up. Post Production work is in full swing for #Viduthalai Part1

A #Vetrimaaran Directorial@VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja pic.twitter.com/QYtGOZ0isv

— RS Infotainment (@rsinfotainment) December 30, 2022