தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Bigil verithanam Song

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Bigil verithanam Song

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigil verithanam Song

இந்த படத்தில் தளபதி விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ள இந்த பாடலை முதலில் சிம்டாங்காரன் பாடலை பாடிய பம்பா பாக்கியா பாடியிருந்தார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து உதித் நாராயணன் இந்த பாடலை பாடியிட்டுந்தாராம்.கடைசியாக தளபதி விஜய் பாட அந்த பதிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் ஓகே செய்துள்ளார்.

Bigil verithanam Song