தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Verithanam Lyrics Controversy Lyricist Vivek Tweet

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Verithanam Lyrics Controversy Lyricist Vivek Tweet

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும்.இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Verithanam Lyrics Controversy Lyricist Vivek Tweet

இந்த படத்தில் இடம்பெறும் புல்லிங்கோ என்ற வார்த்தை வேறு ஒரு லோக்கல் கானா பாடலில் வருவது அதனை நீங்கள் காப்பி அடித்துள்ளீர்கள் என்று ரசிகர் ஒருவர் குற்றம்சுமத்தினார்.இதற்கு தற்போது விளக்கமளித்துள்ளார் படத்தின் பாடலாசிரியர் விவேக்.

Verithanam Lyrics Controversy Lyricist Vivek Tweet

ஸ்டீபனின் பாடல் நன்றாகவே இருக்கும் அது மார்ச் மாதம் வெளியானது.ஆனால் நாங்கள் வெறித்தனம் பாடலை ஜனவரி மாதமே ரெகார்ட் செய்துவிட்டோம் என்று விளக்கமளித்துள்ளார்.மேலும் இந்த வார்த்தையை தான் மெர்சல் அரசன் பாடலிலேயே பயன்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அதோடு இது வடசென்னையில் இயல்பாக பயன்படுத்தும் வார்த்தை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.