தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் ட்விஸ்ட் அமைத்து அசத்துவதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு.இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடகராகவும்,தயாரிப்பாளாராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் வெங்கட் பிரபு.

இவர் தயாரித்து இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து STR நடிக்கவிருக்கும் மாநாடு படத்தினை இயக்கவிருந்தார்.சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போக இவர் வெப் சீரிஸ் எடுக்கவிருக்கிறார்.

ஹாட்ஸ்டார் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என்று நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.தற்போது இதில் வைபவ் ஹீரோவாக நடிப்பார் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ஆம் வாரம் முதல் தொடங்கும் என்று தெரிகிறது.