தமிழக கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கமலஹாசன் நடத்தக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சி ஒன்றில், நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தமிழர்களின் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Velmurugan

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அரசியலுக்கு வந்த பிறகு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைக் கமல் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், ஆக்கப்பூர்வமான விசயங்களில் கமல் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.