காணாமல் போன 10 வகுப்பு பள்ளி மாணவி மீட்கப்பட்ட நிலையில், இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

வேலூர் மாவட்டம் வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர் மாலை வீடு திரும்பவில்லை. 

Vellore girl rescued

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த ஒரு வாரமாகத் தேடி வந்தனர். 

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த பாலூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுமியுடன், இளைஞர் ஒருவர் உடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற போலீசார், அந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.

இதனையடுத்து, காவல் நிலையம் அழைத்து வந்து அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞனே, 10 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞன் பாலூர் பகுதியைச் சேர்ந்த கலை நேசன் மகன் பூவரசன் என்பதும் தெரியவந்தது.

குறிப்பாக, சிறுமியைக் கடத்திய அந்த இளைஞன், பள்ளி மாணவி என்று கூட பார்க்காமல், அந்த சிறுமியை அவன் பாலியல் வன்புணர்வு செய்ததையும் போலீசார் உறுதி செய்தனர். 

Vellore girl rescued

இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் பூவரசனை கைது செய்து, ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.