சினிமா ஒரு கலை,என்டர்டைன்மெண்ட் என்பதை தாண்டி நமக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது.நமக்கு முன் வாழ்ந்த சாதனை மனிதர்களையும்,சமகாலத்தில் இருக்கும் பல வீரர்களையும் நமக்கு காண்பித்துள்ளது.

Velaikkaran climax happens in reallife Modi speech

சமூக பிரச்சனைகளை சினிமாவின் வாயிலாக சொல்வதால் பலகோடி மக்களிடம் இது சேர்கிறது.சினிமாவால் நம் நாட்டில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன.இப்படி சினிமாவின் தாக்கம் வலிமையாக இருக்க தற்போது பிரதமர் மோடி மூலம் நடக்கும் சில உண்மை நிகழ்வுகளோடு சில சினிமா நிகழ்வுகளை பார்க்கலாம்.

Velaikkaran climax happens in reallife Modi speech

2016-ல் பிரதமர் மோடி இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.Demonitisation என்றழைக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ளநோட்டு மற்றும் கருப்பு பணம் அழியும் என்று தெரிவித்தார்.இதே போல் ஒரு காட்சி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaikkaran climax happens in reallife Modi speech

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதலில் ஒரு நாள் ஊரடங்கின் போது மக்களை கைதட்டுமாறு பிரதமர் தெரிவித்தார்.நமக்காக வேலைபார்க்கும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார் மோடி.இது பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Velaikkaran climax happens in reallife Modi speech

தற்போது வரும் ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் மூலம் ஒளியை காட்டி நம் ஒற்றுமையை காட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் முக்கிய காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Velaikkaran climax happens in reallife Modi speech

இது எதர்ச்சையாக நடந்த விஷயங்களா அல்லது நமது தமிழ் படங்களின் மூலம் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள தாக்கமா என்பது தெரியவில்லை, என்றாலும் இது குறித்த மீம்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Velaikkaran climax happens in reallife Modi speech