கடந்த 2006-ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதைத்தொடர்ந்து முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் போன்ற படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அதிக ரசிகர்களை கவர்ந்தார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய ரூலர் படத்தில் நடித்திருந்தார். 

Vedhika Shares Her Lockdown Dance Video

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கை அறிவித்தது. வீட்டிலேயே மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்தாலும், வெளி உலகை காணாமல் பலர் அவதி படுகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர். 

Vedhika Shares Her Lockdown Dance Video

இந்நிலையில் நடிகை வேதிகா, தனது ட்விட்டர் பக்கத்தில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீட்டின் மொட்டை மாடியில் வேதிகா ஆடிய இந்த நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடனமும் ஒருவகையான உடற்பயற்சி என்பதை உணர்த்துகிறார் வேதிகா.