RJ பாலாஜி வெளியிட்ட பப்பி படத்தின் பர்ஸ்ட் லுக் !
By Aravind Selvam | Galatta | August 14, 2019 16:28 PM IST
போகன்,வனமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் வருண்.இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் பப்பி.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை மொரட்டு சிங்கிள் இயக்கியுள்ளார்.போடா போடி,நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த தரண்குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கோமாளி படத்தில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் Firstlook போஸ்ட்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.RJ பாலாஜி வெளியிட்ட இந்த Firstlook போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Here it is, Naughty #PuppyFirstLook. Congrats to team #Puppy @iamactorvarun , @iYogiBabu & @SamyukthaHegde
— RJ Balaji (@RJ_Balaji) August 14, 2019
Dir by #MurattuSingle
Music @dharankumar_c
DOP @dopdeepakpadhy | Editor @RichardEditor @DoneChannel1
Prod by my thaai veedu @VelsFilmIntl 😍 pic.twitter.com/n1ZMSRM1Ko