கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் ஆறுதலான பதிவுகளை தெரிவித்து வருகின்றனர். 

Varshabollama

இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 96 படத்தில் விஜய் சேதுபதியிடம் கை தரும் புகைப்படத்தை கொரோனாவிற்கு முன் என்றும், பிகில் படத்தில் தளபதி விஜய்யிடம் வணக்கம் கூறும் புகைப்படத்தை கொரோனோவிற்கு பின் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Varshabollama Varshabollama

அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்திற்கு பிறகு வர்ஷாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். தமிழ் மொழி படங்கள் அல்லாது தெலுங்கிலும் அசத்தி வருகிறார் வர்ஷா.