தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். சமீபத்தில் மக்கள் செல்வி என்ற பெயரை ரசிகர்களிடமிருந்து பெற்றார். கடைசியாக சர்க்கார், மாரி 2 போன்ற படங்களில் நடித்து அசத்தினார். 

chasing chasing

தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் சேஸிங். இந்த படத்தை வீரகுமார் இயக்குகிறார். மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். தசி இசையமைக்கும் இந்த படத்திற்கு பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். 
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 

chasing chasing

இந்த படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. பாலா சரவணன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டண்ட் காட்சிகளில் டூப் ஏதும் இல்லாமல் வரலக்ஷ்மியே நடித்துள்ளார் என்பது சிறப்பு தகவல். சேஸிங் தவிர்த்து டேனி படத்திலும் காவல் அதிகாரியாக நடிக்கிறார் வரலக்ஷ்மி.