சந்திரலேகா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிக்க வந்த வேகத்தில் சினிமாவில் இருந்து விலகி 19 வயதில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். 2000ம் ஆண்டு ஆகாஷை திருமணம் செய்த வனிதா கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றாரர். அதன் பிறகு ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. ஸ்ரீஹரி தன் அப்பா ஆகாஷுடன் இருக்கிறார். மகள்கள் வனிதா விஜயகுமாருடன் இருக்கிறார்கள். 

படங்கள் கை கொடுக்காத நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நுழைந்து உலகளவில் பிரபலமானார். பிக் பாஸ் 3 வீடு பரபரப்பாக இருந்ததற்கு காரணமே வனிதா தான். அதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது சொந்தமாக யூடியூப் சேனலை துவங்கி நடத்தி வருகிறார்.

வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் திருமணம் என்று கூறி பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியானது. இது குறித்து விசாரித்தபோது, வரும் 27-ம் தேதி வீட்டில் வைத்தே அவர்களின் திருமணம் எளிமையாக நடக்கப் போகிறதாம். மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். 

தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் இன்று எளிமையாக நடந்து முடிந்தது. கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்துள்ளார் வனிதா. வெள்ளை நிற திருமண உடையில் வனிதாவும், கோட் சூட்டில் பீட்டர் பாலும் அம்சமாக உள்ளனர். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டு வாழ்த்தினர். இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த புகைப்படம் இணையத்தை அசத்தி வருகிறது. வனிதா மற்றும் பீட்டர் பால் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.