பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பழைய பங்கேற்பாளர்களான வனிதா, அபிராமி, சாக்ஷி, கஸ்தூரி ஆகியோர் வீட்டிற்கு வந்து இன்பதிர்ச்சி தந்தனர். வீட்டில் நடந்த சிறப்பு நிகழ்வு குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

biggboss

sherin

அப்போது வனிதா பேசுகையில், தர்ஷன் எலிமினேட் ஆகி வெளியே சென்றதற்கு ஷெரின் தான் காரணம் என்ற விஷயத்தை போட்டுடைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதை கேட்ட ஷெரின் மனமுடைந்து அழத்துவங்கினார்.

sakshi

vanitha

அருகில் அமர்ந்து கொண்டிருந்த சாக்ஷி மற்றும் கஸ்தூரி ஷெரினுக்கு ஆறுதலாக பேசுகின்றனர். ஒரு சிலர் வனிதாவிடம் இப்படி பேசியது நியாமா என்ற விஷயத்தை முன்வைக்கின்றனர். டாஸ்குகள் முடிந்த நிலையில் இது போன்ற விஷயங்கள் நடப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இறுதி போட்டிக்கு சில நாட்களே உள்ளது என்பது கூடுதல் தகவல்.