சின்னத்திரையின் புகழ்பெற்ற முக்கிய சீரியல் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நிகிலா சுமன். தெலுங்கு,கன்னடம்,தமிழ் சீரியல்களில் பிரதானமாக நடித்து வந்தார் நிகிலா சுமன்.ராதிகாவுடன் வாணி ராணி தொடரில் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.

Sose Thanda Sowbhagya, Priyasaki, Veer Naari Jhansi Lakshmi, My Name Is Mangatayaru, Happy Days Season 2, Bathuku Jataka Bandi, Yazhini,Super Callenge, Shani உள்ளிட்ட பல வெற்றிகரமான தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவராக மாறினார் நிகிலா சுமன்.

Srinivasa Kalyana என்ற படத்திலும் நடித்து அசத்தியிருந்தார் நிகிலா சுமன்.இவருக்கு சுமன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.ஒரு இடைவேளைக்கு பிறகு சித்தி 2 தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் நிகிலா.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020 மார்ச் மாதமே விலகினார் நிகிலா.அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் உடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் நிகிலா.தற்போது இவருக்கு ஒரு பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது.இவரது அத்தை கொரோனாவிற்கு பழி ஆகியுள்ளார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார் மேலும் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

vani rani chithi 2 fame nikhila suman aunt passes away due to corona virus