கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் RX 100.இந்த படத்தில் நடித்த ஹீரோ கார்திகேயாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இதனை தொடர்ந்து இவர் மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.இந்த படங்களும் வரிசையாக ஹிட் அடித்தன.

ஹீரோவாக மட்டுமல்லாமல் கடந்த 2019ஆம் ஆண்டு நானி ஹீரோவாக நடித்த படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்து மிரட்டியிருந்தார்.இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்து பலரது பாராட்டுகளை அள்ளினார்.அடுத்ததாக சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர் என்று தெரிகிறது.இதுகுறித்து இன்னும் அவர் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை,ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.