தனது நகைச்சுவைகளால் மக்களின் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்த மக்கள் கலைஞன் வைகைப்புயல் வடிவேலு ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அடுத்தடுத்த அட்டகாசமான படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தயாரித்தல் அடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் வைகை வடிவேலு நடித்துள்ளார்.

இதனிடையே வைகைப்புயல் வடிவேலுவின் அடுத்த நகைச்சுவை விருந்தாக தயாராகி இருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். வைகைப்புயல் வடிவேலுவின் ஃபேவரட் கதாபாத்திரங்களில் ஒன்றான நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பக்கா காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன், யூட்யூபர் பிரசாந்த் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலிருந்து புதிய புரோமோ வீடியோ தற்போது வெளியானது வடிவேலுவின் ஃபேவரட் கதாபாத்திரங்களான காண்ட்ராக்டர் நேசமணி, வக்கீல் வண்டு முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள ஆகிய கதாபாத்திரங்களின் பெயரில் வடிவேலு பேசும் அசத்தலான அந்த வீடியோ இதோ…