தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகள் பட்டியலில் நடிகை நயன்தாராவிற்கு தனி இடமுண்டு. பிகில், தர்பார் என இரண்டு முக்கிய படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவிற்கு மட்டும் விசிலடித்து கொண்டிருந்த திரையில், பெண்களும் சோலோவாக ஷீரோவாக அசத்தலாம் எனும் இலக்கணத்தை வகுத்தவர். 

nayanthara

அவள் என்ற பேய் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் என்பவரின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த தகவல் நேற்று வெளியானது. இப்படத்தின் நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் படத்தில் இணைந்து பணியாற்றுகிறார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது.

rowdypictures

தற்போது இப்படத்திற்கு நெற்றிக்கண் என்ற பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் திரைப்படமும் வெற்றி என்பது நாம் அறிந்தவையே.

vigneshshivn