ஜித்தன் 2 புகழ் இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்கத்தில் உருவான படம் கருத்துக்களை பதிவு செய். இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகமாகிறார். ஆர்.பி.எம் சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. 

karuthukalaipadhiusei

இன்றைய சமூக வலைதளம் மூலம் ஏற்படும் காதல்கள் அனைத்தும் ஒரு அபாய வலை. அதில் பெண்கள் கண்மூடி தனமாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாய வலையை பற்றி பேசும் திரைப்படம் தான் கருத்துகளை பதிவு செய். அந்த மாயவலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், எப்படி நயவஞ்சகம் செய்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதைக்கரு. கணேஷ் ராகவேந்திரா மற்றும் பரணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். மனோகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

karuthukalaipadhiusei karuthukalaipadhiusei karuthukalaipadhivusei

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. வீடியோ லிங்க் கீழே உள்ளது.