செலவுக்குப் பணம் இல்லாமல் பிறந்து 20 நாளே ஆன இரட்டை சிசுக்களைப் பெற்றோரே குளத்தில் வீசிய கொலை செய்துள்ளனர். 

உத்திரப் பிரதேச மாநிலம் முசாஃபர் அடுத்த பிக்கி என்னும் கிராமத்தைச் சேர்ந்த வசீம் - நஸ்மா தம்பதியினருக்குக் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. 

Parents kill

இந்நிலையில், நேற்று தங்களது இரட்டை சிசுக்களைக் காணவில்லை என்று, அருகில் உள்ள காவல் நிலையத்தில், பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த குழந்தைகளின் வீட்டின் அருகே உள்ள குளத்தில், குழந்தைகள் இருவரும் சடலமாக மிதந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து, குழந்தைகளின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாகக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்கு புன்னாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் தனித் தனியே விசாரணை நடத்தியுள்ளனர். இதில், செலவுக்குப் பணம் இல்லாததால், பிறந்து 20 நாட்களே ஆன குழந்தைகளைப் பெற்றோர்களே கொன்றது தெரியவந்தது.

Parents kill

அத்துடன், உறவினர்கள் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே, குழந்தையைக் காணவில்லை என்று புகார் அளித்ததாகவும் அவர்கள்  விளக்கம் அளித்தனர்.