மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைக்காத நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அன்று சீனுராமசாமி கண்டெடுத்த பொக்கிஷம், இன்று திரைத்துறையின் கௌரவம்... என போற்றப்படும் நாயகன். கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். 

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமாவதற்கு முன்பு பல குறும்படங்களில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் சத்யா படத்தில் வரும் கமல் ஹாசனை போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சத்யா படத்தை ரீமேக் செய்தால் அல்லது இரண்டாம் பாகம் எடுத்தால் அந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தான் சரியாக இருப்பார் என்று கணித்துள்ளனர் நெட்டிசன்கள். 

1988-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த சத்யா திரைப்படம், கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இதில் கமலின் கெட்டப் இன்று வரை பலரை ஈர்த்து வருகிறது. தற்போது இதே கெட்டப்பில் சேது காணப்பட்டதால், இந்த புகைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. 

மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், எஸ்.பி. ஜனநாதனின் லாபம், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.