நடிகர்,பாடலாராசிரியர்,பாடகர்,இயக்குனர் என பல துறைகளில் தனது பாணியில் அசத்தியுள்ளவர் அருண்ராஜா காமராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார் அருண்ராஜா காமராஜ்.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் செம ஹிட் அடித்த ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்கை இயக்கும் வேலைகளை தொடங்கினார் அருண்ராஜா காமராஜ்.இந்த படத்தினை போனி கபூர்,ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறன்றனர்.திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா,எலெக்ஷன் உள்ளிட்ட காரணமாக தள்ளிப்போனது.அடுத்ததாக இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த படத்தின் சூப்பரான அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதன் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.