சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் உண்மைய சொல்லு இல்ல சொல்லறத செய் என்ற விளையாட்டை வீட்டில் இருப்பவர்கள் விளையாடி வருகின்றனர்.முகென் பாட்டிலை சுழற்ற அது அபிராமியை பார்த்து நிற்கிறது.அவர் தான் எப்போதும் முகென் மீது காதல் வைத்திருப்பதாக தெரிவிக்கிறார்.