Money Heist (La Casa De Papel) இந்த பெயரை இந்த லாக்டவுன் நேரத்தில் கேட்டிராதவர் எவரும் இருக்க மாட்டார்.உலகின் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று Money Heist (La Casa De Papel).ஒரு பேங்க்கை கொள்ளையடிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் சமீபத்தில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு தொடராக மாறியது,குறிப்பாக இந்தியாவில் அதிலும் முக்கியமாக தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு தொடராக இது மாறியது.

இந்த தொடரின் ஹீரோவாக இந்த கொள்ளையை ஒருங்கிணைக்கும் Professorக்கு பல கோடி ரசிகர்கள் உருவானார்கள்.இவர் மட்டுமல்லாமல் இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வந்த 20க்கும் மேற்பட்டவர்களுக்கு மிகவும் பிரபலமாக மாறினார்கள்.Netflix-இல் ஒளிபரப்பான இந்த ஸ்பானிஷ் தொடரை Alex Pina உருவாக்கியிருந்தார்.,மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி மூன்றுமே சூப்பர்ஹிட் அடித்திருந்த நிலையில் இதன் நான்காவது சீசன் சமீபத்தில் வெளியானது.

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தொடரின் நான்காம் சீசன் ஒளிபரப்பப்பட்டது.பலரும் இதனை ஆவலோடு பார்க்க இந்த தொடருக்கு பார்வையாளர்களும்,ரசிகர்களும் வெகுவாக அதிகரித்தனர்.இந்த தொடரின் ஐந்தாவது சீசனை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

இந்த தொடரின் ஷூட்டிங்கை, ஹீரோவாக Professor வேடத்தில் நடித்து வரும் Alvaro Morte தொடங்குவதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.இந்த தொடரின் ஷூட்டிங்கை லாக்டவுனுக்கு பிறகு தொடங்கியுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து தங்கள் மனம் கவர்ந்த தொடரின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது என்று உற்சாகத்தில் இருந்தனர்.

தற்போது Professor-ரை தொடர்ந்து இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான Tokyo மற்றும் Arturo ஆகிய முக்கிய வேடங்களில் நடித்து வரும் நட்சத்திரங்களும் இந்த தொடரின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளனர்.இந்த தொடரின் ஒளிபரப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

tokyo and arturo characters start shooting for money heist season 5