சரக்கு கேட்டு தன்னைத்தானே பாட்டிலால் தாக்கிக் கொண்ட இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் செட்டிபாளையம் சாலையில் ஒரு மதுபான கடை இயங்கிவருகிறது. இந்த டாஸ்மாக் கடையில், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், மது அருந்தியுள்ளார். அப்போது, அவருக்குப் போதை அதிகமாகி உள்ளது.

suicide attempt

இதனையடுத்து, அவருக்குச் சரக்கு மீண்டும் தேவைப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் பணம் இல்லாததால், கடை ஊழியர்களிடம் சரக்கு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரிடம் பணம் இல்லாததால், அவர்கள் சரக்கு தரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர்,அங்கே கிடந்த காலி பாட்டில்களை எடுத்து, தன்னை தானே பாட்டிலால் தாக்கிக் கொண்டு, ரத்தம் சொட்டச் சொட்ட சரக்கு கேட்டு மிரட்டி உள்ளார். மேலும், சரக்கு தரவில்லை என்றால் தாம் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடை ஊழியர்களை அவர் மிரட்டி உள்ளார்.

suicide attempt

இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதை விரைந்து வந்த போலீசார், போதை ஆசாமியிடம் லாபகரமாகப் பேசி அவரை, கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தற்கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.