தமிழ் செய்திகள்

துப்பறிவாளன் 2 குறித்த சுவையூட்டும் செய்தி !

By | Galatta |

துப்பறிவாளன் 2 குறித்த அப்டேட்

துப்பறிவாளன் 2 குறித்த சுவையூட்டும் செய்தி !
September 11, 2019 12:36 PM IST

கடந்த 2017- ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். அரோல் கோரலி இசையமைத்திருந்தார். புகழ் பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ் பாணியில் உருவான இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 

thupparivalan

VFF விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரசன்னா, அனு இமாணுவேல், ஆண்ட்ரியா ஜெரிமையா, பாக்யராஜ், வினய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

vishal

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் தற்போது உருவாக உள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் லண்டன் சென்ற மிஷ்கின், அங்குள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது போல் உள்ள புகைப்படங்களை வெளியிட்டார்.

ilayaraja

தற்போது இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது தெரியவந்தது. விஷால் திரைக்கு வந்து நேற்றோடு 15 வருடங்கள் ஆன நிலையில் இச்செய்தி இனிப்பூட்டும் செய்தியாக அமைந்திருக்கும் என்று கூறினால் மிகையாகாது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More