எப்போதுமே சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் மீது சினிமா ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக மார்வெல்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை உலக அளவில் பழமொழி சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக மார்வெல்ஸின் அடுத்த படமாக வெளிவருகிறது தோர்-லவ் அண்ட் தண்டர் திரைப்படம்.

அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், ஹலக் உள்ளிட்ட ரசிகர்களின் ஃபேவரட்டான மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் மிக முக்கியமான சூப்பர் ஹீரோ தோர். கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தில் அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்த தோர் மீண்டும் ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்க வந்திருக்கிறார்.

தோர்-லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் வழக்கம்போல் தோர் கதாபாத்திரத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் நடிக்க, அவருக்கு வில்லனாக கிறிஸ்டியன் பேல் நடித்துள்ளார். முன்னதாக DC காமிக்ஸின் முன்னணி சூப்பர் ஹீரோவான பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ்டியன் பேல் மார்வெல்ஸ் திரைப்படமான தோர்-லவ் அண்ட் தண்டர் படத்தில் கோர் தி காட் புட்சர் எனும் கதாப்பாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை முழுக்க முழுக்க தோர் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படமாக வெளிவரவுள்ள தோர்-லவ் அண்ட் தண்டர் திரைப்படம் வருகிற ஜூலை 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தோர்-லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…