கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு காரணமான இருக்கும் முக்கிய தொடர் இது. சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.

இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா தாக்கம் குறைந்த பிறகு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வந்தது.இந்நிலையில் இந்த தொடர் நிறுத்தப்படுவதாக கலர்ஸ் தமிழ் அறிவித்தது.இதற்கு ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.திருமணம் தொடர் கடந்த அக்டோபர் 16ஆம் தேதியுடன் ஒளிபரப்பை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை பெரிதும் மிஸ் செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.திருமணம் சீரியல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தற்போது கலர்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.திருமணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Happy News For #Thirumanam and #Perazhagi Fanz!!! Nov 9 Onwards 4PM: Perazhagi (Retelecast) 5PM: Thirumanam (Retelecast) How many of you Waiting?!?! #ColorsTamil #ColorsClassics Back! #TamilTellywood #Exclusive

A post shared by Tamil Tellywood (@tamiltellywood) on