கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் அடையாளமாய் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்த தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தி லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். அந்தவகையில் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ள முதல் திரைப்படம் தி லெஜண்ட்.

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படத்தை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர்.ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி லெஜண்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த ஜூலை 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்து முதல் வாரத்தில் வெற்றிநடை போட்ட தி லெஜண்ட திரைப்படம் தற்போது இரண்டாவது வாரத்தில் புதுவரவுகளாக துல்கர் சல்மானின் சீதா ராமம் உட்பட புதிய திரைப்படங்கள் வெளிவந்த போதும் தொடர்ந்து பல திரையரங்குகளில் வெற்றிநடை போடுவது குறிப்பிடத்தக்கது.