"குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" - வாரிசு படக்குழு வெளியிட்ட Surprise Glimpse .. வைரலாகி வரும் வீடியோ..

Vijay varisu sneak peak exclusivly released | Galatta

இந்த ஆண்டின் துவக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் வாரிசு. தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், ஜெயசுதா, ஷ்யாம், யோகி பாபு  உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து கொண்டாடி வருகின்றனர். பொங்கலையொட்டி வாரிசு  திரைக்கு வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பங்களோடு திரையரங்குகளுக்கு படையெடுத்து கொண்டிருக்கின்றனர். மேலும் அடுத்ததடுத்த நாளுக்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

நேற்று வெளியான வாரிசு படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது மகிழ்ச்சியினை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். படம் வெளியாகி பல இடங்களில் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்நிலையில் வம்சி இயக்கத்தில் வெளியாகிய வாரிசு படத்தின் சிறப்பு காட்சியை வெளியிட்டது படக்குழு.

விஜய் , ராஷ்மிகா மந்தனா  இடையேயான காதல் காட்சிகளோடு யோகி பாபுவின் அதிரடி நகைச்சுவை பஞ்ச் டயலாக்குகளுடனான சிறப்பு காட்சி வெளியானது. இதில் இறுதியில் 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி' என்று தளபதி விஜயின் வசனத்துடன் சிறப்பு காட்சி நிறைவு பெறுகிறது. இதனையடுத்து வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரசிகர்களிடையே வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

விஜய் - யோகி பாபு நகைச்சுவை காட்சிகள் சமீப காலமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக மெர்சல், பிகில் படங்களில் இருவரது காமெடி டிராக் மக்களிடம் அரங்கம் அதிர கைத்தட்டலை வாங்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரம் என்றாலும் திரையில் அவருக்கென்ற ஒரு நகைச்சுவை டிராக்கை தனியாக இணைப்பது வழக்கம். ஆரம்பத்திலிருந்தே அந்த நகைச்சுவை பாணியில் தான்  குடும்பங்களையும் குழந்தைகளையும் கவர்ந்தார். அவர் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. ஜனரஞ்சகமான நகைச்சுவையை போறப்போக்கில் அசால்ட்டாக அடித்து விடக் கூடிய திறன் விஜய் க்கு உண்டு. அதன் படியே அவரது படங்களின் காட்சிகளும் இருக்கும்.

படத்தின் பாடல்கள், டிரலைர், சிறப்பு காட்சி அடிப்படையாக இப்படத்தில் சண்டை காட்சிகள், அட்டகாசமான பாடல்கள், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் என குடும்பங்களை கட்டியிழுக்கும் சில உக்தியை இந்த படத்திலும் கையாண்டு இருக்கிறார் என்று தெரிய வருகிறது. நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இந்த படம் இருக்கும் என்றே ரசிகர்களின் கருத்தாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

துணிவு படத்தின் Bank Set – சுவாரஸ்யமான ரகசியங்களை போட்டுடைத்த எச்.வினோத்.. முழு வீடியோ இதோ..
சினிமா

துணிவு படத்தின் Bank Set – சுவாரஸ்யமான ரகசியங்களை போட்டுடைத்த எச்.வினோத்.. முழு வீடியோ இதோ..

வாரிசு பட கதையில் விஜய் தவிர வேறு யாராவது நடிக்க வைக்க முடியுமா? – இயக்குனர் வம்சி விளக்கம்.. முழு வீடியோ இதோ..
சினிமா

வாரிசு பட கதையில் விஜய் தவிர வேறு யாராவது நடிக்க வைக்க முடியுமா? – இயக்குனர் வம்சி விளக்கம்.. முழு வீடியோ இதோ..

ஜாக்கி சான், டாம் குரூஸை பின்னுக்கு தள்ளிய ஷாருக் கான் – உற்சாகத்தில் ரசிகர்கள் .. வைரலாகி வரும் புள்ளி விவர பட்டியல் இதோ..
சினிமா

ஜாக்கி சான், டாம் குரூஸை பின்னுக்கு தள்ளிய ஷாருக் கான் – உற்சாகத்தில் ரசிகர்கள் .. வைரலாகி வரும் புள்ளி விவர பட்டியல் இதோ..