தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.இவர் நடிப்பில் 96 ரீமேக் திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வந்தார் சமந்தா,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா உடன் இவர் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

அமேசான் ப்ரைம்மில் வெளியாகி செம ஹிட் அடித்திருந்த வெப் சீரிஸ் The Family Man, மனோஜ் பாஜ்பாய் , ப்ரியாமணி உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து அசத்தியிருந்தனர்.இதன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தயாராகியுள்ளது.இதில் சமந்தா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடர் ஜூன் மாதம் 4ஆம் தேதி அமேசான் ப்ரைம்மில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சீரிஸின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்