தஞ்சாவூர் அருகே டிரான்ஸ்பர் ஆர்டரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் லதா, பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியர் லதாவும் கலந்துகொண்டார்.

school teache

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 20 பேருக்குப் பணி மாறுதல் திட்டத்தின் கீழ், டிரான்ஸ்பர் ஆர்டரை கல்வி அலுவலர்கள் கொடுத்துள்ளனர்.

இந்த டிரான்ஸ்பர் ஆர்டர் பார்த்த ஆசிரியர் லதாவுக்கு, மன அழுத்தம் அதிகமாகி, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார். இதனையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

school teache

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.