தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஹீரோவாக இருந்து வருகிறார். தளபதி விஜய்யின் நடிப்பை போல அவரது நடனத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. எவ்வளவு கடினமான ஸ்டெப்ஸ் என்றாலும் தனது ஸ்டைலில் எளிதாக செய்து முடித்து விடுவார். 

Thalapathy Vijays Enna Azhagu Song Recreation

விஜய் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆவது வழக்கம். கடந்த 1997-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தில் இடம்பெற்ற என்ன அழகு பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதில் பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ஷோபி மற்றும் ராபர்ட் உள்ளிட்டோர் தளபதி விஜய்யுடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார்கள்.

Thalapathy Vijays Enna Azhagu Song Recreation

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் மீண்டும் இணைந்து அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தனர். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷோபி மாஸ்டர். அதில் 22 வருடங்களுக்கு பிறகு ஒரே பாட்டுக்கு சகோதரர் ராபர்ட்டும் நானும் இணைந்து டான்ஸ் ஆடினோம் என்று பதிவு செய்துள்ளார்.