திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். 

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார் தளபதி விஜய். அந்த புகைப்படங்கள் கூட இணையத்தை அதிர வைத்தது. 

இந்நிலையில் ஒரு விஜய் ரசிகர் ஜில்லா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வீடியோ ஒன்று ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அது இணையத்தில் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. 2014 இல் வெளிவந்த ஜில்லா படத்தில் 'எப்போ மாமா ட்ரீட்டு' பாடலை ஷூட் செய்து கொண்டிருந்த போது நடந்த காமெடியான ஒரு சம்பவத்தின் வீடியோ தான் அது.

காஜல் அகர்வால் அங்கு இருக்கும் நடன கலைஞர்களுடன் சீரியஸாக நடனமாடிக் கொண்டிருக்கும் போது நடுவில் வரும் விஜய் டச்சப் பாய் போல காஜல் அகர்வாலுக்கு கண்ணாடி காட்டி அவரை கிண்டல் செய்கிறார். அதனால் காஜல் அகர்வால் அந்த கண்ணாடியை அவரிடமிருந்து பிடுங்க முயற்சிக்கிறார். அதற்கு பிறகு விஜய் அனைவருடனும் சேர்ந்து நடனம் ஆட துவங்குகிறார்.

பொதுவாக நம்ம தளபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக தான் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அமைதியாக அமர்ந்து காட்சிகள் குறித்து யோசித்து கொண்டிருப்பார், ஷாட் ரெடி என வந்து நடிக்க துவங்கினால் வேறு விதமாக மாறி விடுவார் என்றும் இயக்குனர்கள் கூறுவார்கள். தற்போது விஜய் இவ்வளவு ஜாலியாக படக்குழுவினருடன் இருந்திருப்பதை பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர் ரசிகர்கள்.