தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் கலாட்டாவுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

தான் விஜயின் மிகப்பெரிய ரசிகர் என்றும் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.சண்டை காட்சிகள் போன்ற காட்சிகளில் விஜய் அசத்திவிடுவார் என்றும் அவரை ஸ்டைல் மன்னன் என்றும் புகழ்ந்துள்ளார்.