சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெடியாய் வெடித்தது சர்க்கார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, யோகிபாபு, பழ. கருப்பையா ஆகியோர் தளபதியுடன் இணைந்து அசத்தினர். படம் வெளிவந்து சில பிரச்சனைகளை சந்தித்தாலும், ரசிகர்களின் முழு ஆதரவோடு சக்கை போடு போட்டது.

Thalapathy Vijay Scored A Biggest Acheivement By Giving A Blockbuster In France

தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், பிரான்ஸ் நாட்டில் இந்திய திரைப்படங்களில் சர்க்கார் படம் தான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று கூறப்படுகிறது. அங்கு வெளியான டாப் 40 படங்களின் வரிசையில் சர்க்கார் 19-வது இடத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறிவருகிறது.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, கடல் கடந்து சாதனை நிகழ்த்தும் இதயத்து அதிபதியான விஜய்யின் சாதனை ஓட்டம் தொடர கலாட்டா குழு சார்பாக வாழ்த்துகிறோம்.