தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்,லாக்டவுனுக்கு பிறகு தனது இயக்குனர் குழுவுடன் இணைந்து ஒரு போட்டோவை க்ளிக் செய்து பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது தளபதி விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.ஷிமோகாவில் நடந்த ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்